ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயகரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படைவீரர்கள் சுற்றி வளைத்தனர்.
இதன் காரணமாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தன.இதில், பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார். எனினும், இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சி ஆர்பிஃஎப் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
அவந்திபுரா பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல சிஆர்பிஎஃப் வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.