செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா சிறப்பாக நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சிறப்பாக நடைபெற்ற 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

2 minutes read

உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 3ஆம் திகதி முதல் 7ஆம் ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

தமிழ்மொழியின் தொன்மையை பறைசாற்றும் இந்த மாநாடு கணிசமான கால இடைவெளிக்குப் பின்னர் நடக்க நடைபெற்றுள்ளமை விசேட அம்சமாகும். உலகளாவிய ரீதியில் தமிழினம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் செயல்பாடுகளும் சில நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியது.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நீண்ட கால கனவாக 1964இல் ஜனவரி மாதத்தில்  26 ஆவது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போது தனிநாயகம் அடிகளார் தன்னுடைய கனவாக உலகத் தமிழ் ஆய்வு மன்றம் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிநாயகம் அடிகளார் முதலாவது மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடத்தினார். இரண்டாவது மாநாட்டை தமிழகம் சென்னையில் 1968இல் நடத்தினார். மூன்றாவது மாநாட்டை பாரிஸ் நகரில் நடத்தினார். நான்காவது மாநாடு 1974 இல் இலங்கையில் இடம்பெற்றது. இந்த மாநாட்டின் போது இலங்கை அரச படைகள் மற்றும் காவல் படைகள் நிகழ்த்திய வன்முறையினால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் கறை படிந்த நாளாக உலகத் தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை காணப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களில் அதிகரித்துச் செல்லும் இக்கால கட்டத்தில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ் இலக்கியம் செம்மொழி இலக்கியங்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ள நிலையில் நடைபெறும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் அடிகளார்  மகுடமிட்ட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோஷம் உலகமெங்கும் பரவும் வகையில் அது தொடர்பான பாடல் ஒன்றையும் உலகத் தமிழ் ஆய்வு மன்றம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களும் பேராளர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்துள்ளனர். அத்துடன் தமிழகத்தில் இருந்தும் பலர் இந்த மாநாட்டுக்காக வருகைதந்துள்ளனர்.

இதேவேளை இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து 20 பேர் இந்த மாநாட்டுக்கு பயணம் செய்துள்ளனர். அத்துடன் இவர்களுக்கு இலவச பயண ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More