2
குழந்தை சுஜித் உயிருடன் திரும்பி வர வேண்டும் என கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உசுரோட வாமகனே
‘சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே..’
-கவிப் பேரரசு வைரமுத்து