இலங்கை தனது எதிர்காலத்திற்கு தீர்க்ககரமானதாக அமையக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் சனிக்கிழமை வாக்களிக்கவுள்ளது.
நாடு 2019 ஏப்பிரல் 21உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பாதிப்பிலிருந்தும்- 18 மாத ஸ்திரதன்மை இன்மை மற்றும் அரசியல்உள்மோதல் இன்னமும் விடுபடாத நிலையில் காணப்படுகின்றது.
ராஜபக்சாக்கள் பிரிவினைவாத தமிழ் கிளர்ச்சிக்காரர்களை ஈவிரக்கமற்ற விதத்தில் தோற்கடித்தமைக்காகவும்,மேற்குலகும் இந்தியாவும் அவர்களைபுறக்கணித்த வேளை இலங்கையை சீனாவை நோக்கி கொண்டு சென்றமைக்காகவும் நன்கு அறியப்படுகின்றவர்கள்,அவர்கள் மீண்டும் நாட்டின் மிகவும் ஆழமாக பிளவுபட்ட அரசியலில் முக்கியமானவர்களாக மாறியுள்ளதுடன் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.
குடும்ப விவகாரம்
ஒரு சகோதரர் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படுகின்றார்,மற்றையவர் பிரதமர் பதவியை குறிவைக்கின்றார், அதற்கான தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது.
மற்றைய இருசகோதரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அரசியல் கொள்கை வகுப்பாளர்களாக காணப்படுகின்றனர்.அவர்களில் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக வருவது குறித்து விருப்பம் கொண்டுள்ளார்.
அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையை சேர்ந்த மூவர் அரசியலில் உள்ளனர்.
மகிந்த பிரதமரிற்காக வெளிப்படையான தெரிவு,சமல் சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
ராஜபக்ச பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டமை
மகிந்த ராஜபக்ச தனக்கு எதிராக மாறிய தனது அமைச்சரவை சகாவான மைத்திரிபால சிறிசேனவிடம் 2015 இல் தோல்வியடைந்தார்.அந்த தோல்வியின் பின்னர் அந்த குடும்பத்தின் அதிஸ்டங்கள் வீழ்ச்சிகாணத்தொடங்கின.
மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையிலுள்ளார்.அவர் கோத்தபாயவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்கின்றார், இராணுவசுபாவத்தை கொண்டுள்ள முரட்டுத்தனமான தனது சகோதரரிற்கு பதில் பிரச்சாரத்திற்கு ஒரு வித மென்மையை வழங்குகின்றார்.
ஜனாதிபதி பதவியை குறிவைத்தல்
ஒரு தசாப்தகாலத்திற்கும் மேல் இலங்கை தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய ஏழு சகோதரர்களில் கோத்;தாபயவும் ஒருவர். 2015 ஜனாதிபதி தேர்தல் வரை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தார். கோத்தபாய ராஜபக்சபாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.
சனிக்கிழமை தேர்தல்களில் அவரே வெற்றிபெறுவார் என்றஎதிர்பார்ப்பு அதிகளவிற்குகாணப்படுகின்றது.
தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகயிருந்தவேளை கோத்தாபய ராஜபக்ச விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.தமிழ் பிரிவினைவாதிகள் , விமர்சகர்கள் பத்திரிகையாளர்களை கொலை செய்தமை குறித்து அமெரிக்காவிலும் இலங்கையிலும் வழக்குகளை எதிர்கொண்டார்.
அச்சத்தை பயன்படுத்துதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு பின்னர் தலைதூக்கியுள்ள பாதுகாப்பு அச்சத்தினை மையமாக கொண்டு கோத்தாபயவின் பிரச்சாரம் அமைந்துள்ளது.
அவர் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய வலுவான மனிதராக தன்னை முன்னிறுத்தியுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் இரு தோல்விகளாக பாதுகாப்பும் ஸ்திரமின்மையும் காணப்படுவதால் , கோத்தாபய ராஜபக்சவின் இந்தநிலைப்பாட்டிற்கு சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் ஆதரவு காணப்படுகின்றது.
அதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது காணப்பட்ட அடக்குமுறையும் மனித உரிமை துஸ்பிரயோகங்களும் கோத்தாபய ஜனாதிபதியானால் மீண்டும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.