ஈழத் தமிழ் தொழில் அதிபரும், பல அறக்கட்டளைகளை நடாத்திவரும் மனிதநேயம் கொண்ட, டாக்டர் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு “சிகரம் தொட்ட தமிழன்” என்ற விருதை Zee தமிழ் தொலைக்காட்சி வழங்கி கெளரவித்துள்ளது. தமிழக தலைநகர் சென்னையில், சமீபத்தில் இடம்பெற்ற மாபெரும் விழாவில், இந்த விருதை வழங்கி கெளரவித்துள்ளார்கள். 2006ம் ஆண்டில் லைக்கா என்னும் நிறுவனத்தை நிறுவி, இன்று உலகளாவிய ரீதியில் சுமார் 24 நாடுகளில் 40 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட பெரும் நிறுவனமாக லைக்கா இயங்கி வருகிறது.
அது போக தென்னிந்திய திரைப்பட துறையில், லைக்கா வருகையால் தமிழ் திரை உலகமே பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களுக்கு நிகரான அருமையான தமிழ் திரைப்படங்களை பெரும் பொருட் செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனால் பல நூறு குடும்பங்கள் வாழ்ந்தும் வருகிறார்கள். இதுபோக ஞானம் அறக்கட்டளையை தனது தயாரின் பெயரில் ஆரம்பித்த டாக்டர் சுபாஷ்கரன் அவர்கள். அதனூடாக இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வட கிழக்கிற்கு பெரும் உதவிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
https://www.facebook.com/athirvu/videos/186015045820766/?t=0