கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் பிரபல இந்தி நடிகை மலைக்காவின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மலைக்கா வசித்த அடுக்கு மாடி குடியிருப்பையே தனிமைப்படுத்தி சீல் வைத்து விட்டனர். இதனால் மலைக்கா தவிப்பில் உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நடிகை மலைக்கா கூறும்போது, என் வீட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. என் வீட்டில் கிருமி நாசினி மட்டுமே தெளிக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.
இவர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உயிரே என்ற பெயரிலும் இந்தியில் தில்சா பெயரிலும் வெளியான படத்தில் ‘தைய தையா‘ என்ற பாடலுக்கு மலைக்கா நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.