கனடாவில் இந்திய இளைஞர்கள் இரண்டு பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜியன் சிங் (22) மற்றும் அவர் நண்பர் ஆகிய இருவரும் தங்கள் உயர்படிப்புக்காக கனடாவுக்கு சென்றனர்.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் இருவரும் வெளியில் சென்றுவிட்டு இரவு காரில் வான்கூவரிலுள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது ஜியனின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த டிரக் லொறி மீது வேகமாக மோதியது.
இந்த சம்பவத்தில் ஜியன் மற்றும் அவர் நண்பர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஜியன் மற்றும் அவர் நண்பரின் அடையாள அட்டையை வைத்தே இருவரையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த ஜியனுக்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நடக்கவிருந்தது.
அவர் திருமணத்துக்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வந்த நிலையில் ஜியனின் மரணம் அவர்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.