0
வண்ணப் பட்டுக் குட்டி நான்
வாசமுள்ள பூவும் நான்
கண்ணைத் திறந்து பார்க்கின்றேன்
காணும் உலகும் அழகுதான்
நிலவும் வானும் என்னோடு
நிறையப் பேசும் காலம் வரும்
உலவும் தென்றல் காற்று வந்து
உறங்கச் சொல்லும் நேரம் வரும்
என்னை நானே உங்களுக்கு
இதமாய் அறிமுகம் செய்கின்றேன்
யாதவி என்பது என் பெயர்தான்
யாவருக்கும் இனிமை ஆனவள்தான்
அம்மா அப்பா அக்காவோடு
அருமைச் சொந்தம் நிறையத்தான்
அனைவர் பெயரும் விரைவினிலே
ஆசையாய் கற்று சொல்லிடுவேன்
– யாதவி –