தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் மட்டும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 243 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. சென்னையில் மட்டும் சுமார் 83 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.
அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் அதிகபட்சமாக 220 பேருக்கும், செங்கல்பட்டில் 125 பேருக்கும் , காஞ்சிபுரத்தில் 110 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது. மதுரையில் 263, விருதுநகரில் 196 , தூத்துக்குடியில் 189, தஞ்சாவூரில் 117, விழுப்புரத்தில் 113 மற்றும் திருச்சியில் 100 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.