நடிகை யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் நிலையில் சமீபத்தில் அவர் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோஷூட்டில் நெற்றி வகிடில் பொட்டு வைத்து இருந்ததால் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்
நடிகை யாஷிகா இந்த கொரோனா விடுமுறை நேரத்தில் தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அவர் சேலையில் ஹோம்லி லுக்கில் எடுத்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்
அதில் அவர் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இருந்ததால் யாஷிகாவுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். பொதுவாக திருமணம் ஆன பெண்கள் மட்டுமே நெற்றி வகிட்டில் பொட்டு வைப்பார்கள் என்பதால் இந்த கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது
ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த யாஷிகா, ‘இது போட்டோஷூட்டுக்காக வைக்கப்பட்ட பொட்டு என்றும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சேலையுடன் ஹோம்லி லுக்கில் யாஷிகா அழகாக இருப்பதாக சிலரும் இந்த உடை உங்களுக்கு செட் ஆகவில்லை என்று சிலரும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது