நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை சேர்ந்த சதானந்த என்பவரின் மகன் பிரதீக்ஸ் (வயது20).
இவர் இத்தாலி நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
இத்தாலியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு படித்து வந்த மாணவ மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இதையடுத்து அவர் அங்கேயே தங்கி இருந்தார். தனிமையில் தொடர்ந்து இருந்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து இவர் மருத்துவ மனையில் ஓரு மாதம் சிகிச்சை பெற்று உள்ளார். பின்னர் தனது இருப்பிடத்திற்கு சென்று தங்கி உள்ளார்.
கடந்த 10 ம் தேதி தனது தந்தையிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார.
அப்போது , தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது என்றும், அதனால் தற்கொலை எண்ணம் வருகிறது என்றும் பேசிகிட்டு இருக்கும் போது கைபேசியை துண்டித்து விட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டு உள்ளார்.
இந்தியா வெளியுறவு துறை இணை மந்திரி முரளிதரன் இத்தாலியில் உள்ள நமது தூதரகம் மூலம் பிரதீக்ஸ் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்