மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுககு மத்தியில் இன்று மாலை இடமபெற்றது.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய தாக்குதலில் 18 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டவர்கள் வருடாந்தம் நினைவுகூரப்பட்டுவந்த நிலையில் இந்த ஆண்டு அந்த நினைவுகூரலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அனுஸ்டிப்புக்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஞாபகார்த்த தூபியருகே இந்த நிகழ்வு அவரினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி உயிர் நீர்த்தவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தினார்.
வழமையாக இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யும் ஏற்பாட்டுக்குழுவினருக்கு பொலிஸ் மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நிகழ்வினை அவர்களால் நடாத்த முடியவில்லையென மக்கள் தெரிவித்தனர்.