செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா 50 படங்களில் நடித்த காதல் பட வில்லன் தண்டபாணி மரணம்50 படங்களில் நடித்த காதல் பட வில்லன் தண்டபாணி மரணம்

50 படங்களில் நடித்த காதல் பட வில்லன் தண்டபாணி மரணம்50 படங்களில் நடித்த காதல் பட வில்லன் தண்டபாணி மரணம்

1 minutes read

காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 2004–ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருந்தார். அதில் வரும் ‘‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’’ பாடலில் கானா உலகநாதனுடன் இயல்பாக நடித்து இருந்தார். தொடர்ந்து இங்கிலீஷ்காரன், உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது, நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து வந்தார். நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இரவு வடபழனி மன்னார் தெருவில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

இன்று காலை 6 மணிக்கு திடீர் என்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் தண்டபாணி மாரடைப்பு காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More