உடல் உறுப்புகளை தானம் செய்யும் அசின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் அசின்

அசின் இந்தியில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளது. இதற்கான கதைகள் கேட்டும் வருகிறார்.

இன்னொரு புறம் சமூக சேவை பணியிலும் ஓசையில்லாமல் ஈடுபட்டு வருகிறார். ஏழை மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்குகிறாராம். சமீபத்தில் மும்பையில் ரத்ததான முகாம் நடந்தது. இதை துவக்கி வைக்க அசினை அழைத்து இருந்தனர்.

அங்கு சென்ற அசினும் ரத்த தானம் செய்தார். அத்துடன் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அசினும் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:– என் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை இப்போது செய்துள்ளேன். தேவையானவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக உறுப்புகளை தானம் செய்துள்ளேன்.

எனது நடவடிக்கை மற்றவர்களையும் இதுபோல் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். எல்லோரும் என்னுடன் இணைந்து உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்