விஜய் சினிமா உலகத்திற்கு வந்து 22 ஆண்டு கடந்து விட்டது. இதை விஜய்யின் ரசிகர்கள், திரையுலகத்தினர் கொண்டாடி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதற்காக விஜய், தன்னை வைத்து இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தன்னுடை நடித்த நடிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதில் பெரிய தயாரிப்பாளர்கள் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். பாரம்பரிய தயாரிப்பாளர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் முதன்மையானவராக விஜய் கூறியுள்ளார். உதயநிதியை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தை உதயநிதி தயாரித்திருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தரணி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
விஜய்யை வைத்து மீண்டும் எப்போது படம் தயாரிக்க போகிறீர்கள் என்று கேட்கும்போது, விஜய் எப்போது தேதி தருகிறாரோ அப்போது படம் தயாரிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அட்லியுடன் இணையவுள்ளார். அதன்பிறகு கே.வி.ஆனந்துடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படங்களுக்குப் பிறகு உதயநிதிக்கு தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.