2014-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகராகவும், சிறந்த பாடலாசிரியராக நா. முத்துக்குமார், சிறந்த பாடகியாக உத்ரா உன்னி கிருஷ்ணன், சிறந்த தமிழ் திரைப்படம் குற்றம் கடிதல், சி்றந்த குழந்தைகள் திரைப்படம் காக்கா முட்டை, காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்கள், ‘ஜிகர்தண்டா’ படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைப்பெற்றது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.
சிறந்த துணை நடிகருக்காக பாபி சிம்ஹா, சிறந்த பாடலாசிரியராக நா.முத்துக்குமார், சிறந்த பாடகியாக உத்ரா உன்னி கிருஷ்ணன், சிறந்த தமிழ் திரைப்படம் குற்றம் கடிதல் படத்தை தயாரித்த ஜே.எஸ்.கே.சதீஷ், சிறந்த குழந்தைகள் திரைப்படம் காக்கா முட்டை படத்தை தயாரித்த தனுஷ், காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்கள், படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என அனைவரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இதுதவிர, ப்ரைட் ஆப் தமிழ் சினிமா என்ற புத்தகத்தை எழுதிய, யுடிவி தனஞ்ஜயனுக்கு சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.