“பிகில்” திரைப்படத்திற்காக, மோட்டார் சைக்கிளில், நடிகர் விஜய் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கை பார்க்க திரண்டவர்களில் ஒருவர், அதனை தனது செல்போனில் படம்பிடித்த நிலையில், அக்காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் அட்லி-யின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், உருவாகி வரும் “பிகில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது, படத்தின் காட்சி ஒன்றிற்காக, நடிகர் விஜய், மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி, மேம்பாலத்தில் வைத்து படமாக்கப்பட்டது.
இதனை, பாலத்திற்கு கீழே நின்றிருந்த ரசிகர்கள், உற்சாக முழக்கத்துடன் கண்டுகளித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில், நடிகர் விஜய் செல்லும் காட்சி, அங்கிருந்தவர்களால், மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.