தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி எப்போது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எங்கு நடைபெறும் என்று அறிவிக்கவில்லை. எனினும், தாம்பரம் பகுதியிலுள்ள ஸ்ரீ சாய்ந்ராம் பொறியியல் கல்லூரியில் பிகில் இசை வெளியீடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டைத் தொடர்ந்து பிகில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் தீபாவளி பண்டியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தமிழ்நாடு விநியோக உரிமை குறித்து தகவல் ஏதும் வெளிவராத நிலையில், தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக அட்லி – விஜய் கூட்டணியில் தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் வெளியாகிரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் பிகில். ஆதலால், கண்டிப்பாக இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய், தனது 64ஆவது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.