படத்தை நீண்ட நாள் ஓட்டுவதற்காக நடிகர் விஜய் அரசியல் பேசுவதாக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
அதனால் தான் இதுபோன்ற திரைப்பட விழாக்களிலும், இசை வெளியீட்டு விழாவிலும் இத்தகைய அரசியலைப் பேசி, அதன் மூலமாக தன்னுடைய திரைப்படத்தை ஓட்டுவதற்கான அரசியல் செய்து வருகின்றனர். அவற்றில் பல நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர். அவரின் திரைப்படங்கள் அப்படித்தான் ஓடுகின்றன. சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதெல்லாம் விஜய் தெரிவித்துள்ளார். யாரை எங்கு வைக்க வேண்டுமோ… அங்கு தான் தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றியை அளித்து ஆட்சியைத் தொடர அனுமதித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல் இன்று எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம் வரை எங்களுக்கு மக்கள் வெற்றியைத் தந்திருக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது.” என்றார்.