லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து வருகிறார். இதனை அடுத்து அதே லைகா நிறுவனம் தயாரிப்பில் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜூலை 15 ஆம் தேதி பூஜை போடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கமலின் இந்தப் படத்தில் வடிவேலுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று, அதற்கு வடிவேலுவும் சம்மதம் சொல்லி உள்ளதாக தகவல்.
இதற்கு முன்னர் கமலுடன் இணைந்து வடிவேலு சிங்கார வேலன், காதலா காதலா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத்தில் நடிப்பதை சில ஆண்டுகளாக தவிர்த்து வந்தாலும், சமூக ஊடகங்களில் வடிவேலுதான் தமிழர்களின் ஒரே மீம்ஸ் நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.