இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69.
கர்நாடகாவின் மங்களூருவில் மித்தகரேவைச் சேர்ந்த இவர், சாக்சபோனை வாசித்து பல்வேறு விருதுகளை பெற்றார். அவரது தந்தை ஒரு நாதசுவரக் கலைஞராவார். இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
மேலும், அவர் இலங்கை கம்பன் கழகம், கம்பன் புகழ் விருதையும், கர்நாடகாவில் கலாஸ்ரீ விருதையும், கர்நாடகாவில் ராஜ்யோட்சவா விருதையும் பெற்றார். தமிழில் டூயட் என்ற திரைப்படத்துக்கு 30 ராகத்தில் சாக்சபோன் இசையை வாசித்து அசத்தினர். இந்த படத்துக்கு பிறகு தான் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.