பிகில் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.
விஜய் அட்லீ – கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வெளியாகும் நாள் நெருங்கி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறை வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் விஜய் மக்கள் இயக்க வடக்க மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டி கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள் கோயிலில் உள்ள வெறுந்தரையில் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.
இதில் தொண்டரணி துணைத்தலைவர் இ.அறிவரசன் மாவட்ட நிர்வாகி ஆர்.பிரகாஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபஞ்சன், ஒன்றியத் தலைவர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்களே அதிகம் காணப்பட்டு வந்த நிலையில் இம்முறை படம் வெற்றியடைய வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலை வாரிக் குவித்து வெற்றி பெறுமா ‘பிகில்’ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்