நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில், சிம்பு, பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.
இந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை பிந்து மாதவி, சரியான கொள்கை சிம்பு, நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணை சந்திக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சிம்புவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.