அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. புட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கதிரின் வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா – அம்மாவின் போட்டோ பகிர்ந்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில்,
இருவரது வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் கனவும், ஆசையும் தான் இன்றைக்கு நான் இருக்கும் இடம். 53 வருடங்களுக்கு பிறகு அவர் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு மாஸ்டர் படத்தில் நிறைவேறியது. அது மிகவும் சிறிய வேடம் தான். அவருடைய வாழ்க்கைக் கனவு நிறைவைடைந்தது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. என்று குறிப்பிட்டுள்ளார்.