நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.
‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ஏப்ரல் மாதம்வெளியாகவிருந்த இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா அச்சுறுத்தல் அனைத்துமே முடிவுக்கு வந்தவுடன்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது. விரைவில் இப்பட டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனதுபடம் பற்றி கூறிய லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷனின் போது சுமார் பத்து முறை மாஸ்டர் படத்தைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு முறையும் முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்ததாகவும், மேலும் இந்தப் படம் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என லோகேஷ் கனகராஜ்’ தெரிவித்துள்ளார்.