அந்த வீரத்தமிழச்சி தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி சொன்ன பொய்யை தமிழக மக்கள் இன்னும் மறக்காமல் அவரை போலி, போலி என்கிறார்கள்.
இந்நிலையில் ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவலை ஜூலி இதுவரை உறுதி செய்யவில்லை. அதனால் அவர் உறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
ஜூலிக்கு திருமணம் என்ற தகவல் வெளியானதும் அது ஏன் இந்த நடிகைகள் எல்லோரும் தொழில் அதிபர்களையே திருமணம் செய்கிறார்கள் என்று சினிமா ரசிகர்கள் கேட்டுள்ளனர். என்னாது, ஜூலி நடிகையா என்று வியந்து கேட்க வேண்டாம். ஜூலி கோலிவுட்டில் நடிகையாகி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆனார்.
அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரைவிட்ட அனிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிக்க ஜூலி ஒப்பந்தம் ஆனார். அந்த படங்கள் குறித்த போஸ்டர்களும் வெளியாகின. மேலும் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திலும் நடித்துள்ளார் ஜூலி.
ஜூலி அந்த படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் நடிக்கிறார் என்று தொடர்ந்து அறிவிப்பு மட்டும் தான் வெளியாகிறதே தவிர அவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். ஜூலி ட்விட்டரில் என்ன கருத்து தெரிவித்தாலும், புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டாலும் சமூக வலைதளவாசிகள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்து வந்தனர்.
இந்த காரணத்தால் ஜூலி ட்விட்டரை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றார். அங்கு அவர் என்ன புகைப்படம் வெளியிட்டாலும் பாராட்டுபவர்களே அதிகமாக உள்ளனர். இந்நிலையில் ஜூலி மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாகிவிட்டார்.
தான் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் ஜூலி ரசிகர்களோ, அக்கா செம, சூப்பராக இருக்கிறீர்கள் என்று அவரின் அழகை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களோ, என்ன ஜூலி சும்மா சும்மா புகைப்படத்தை வெளியிட்டு கடுப்பேத்துறீங்க என்று திட்டுகிறார்கள்.
ஜூலி தொடர்ந்து திருமண கோலத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் அவருக்கு விரைவில் திருமணம் தான் போன்று என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று அதாவது பிப்ரவரி மாதம் 14ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதை மீரா மிதுனே ட்விட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் மேலும் ஒரு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருக்கு திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.