கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் தென்னிந்திய அளவில் மட்டுமல்ல, இந்திதிரையுலகின் கவனத்தையும் ஈர்த்தது.
மலையாளத்தின் வெற்றி பெற்ற திரைக்கதையாசிரியர்களில் ஒருவர் சச்சி. அவரை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்திருக்கும் படம், ‘அய்யப்பனும் கோஷியும்’.
பிரித்விராஜ்-பிஜுமேனன், அய்யப்பனும் கோஷியுமாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன.
தெலுங்கில் இந்தப்படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெர்சி மற்றும் அல வைகுண்டபுரம்லூ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த சூர்யதேவரநாகவம்சி கைப்பற்றியுள்ளார்
பிஜுமேனன் மற்றும் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் தெலுங்கில் பாலகிருஷ்ணா-ராணா, ரவிதேஜா-ராணா நடிக்கிறார்கள் என அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக பவன் கல்யாண் இந்தப் படத்தில் நடிக்க விரும்புகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பிஜுமேனன் நடித்த அய்யப்பன் நாயர் என்கிற போலீஸ் கேரக்டரில் நடிக்கத்தான் பவன் கல்யாண் விரும்புகிறாராம்.
பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி பவன்கல்யாண் பிறந்தநாளன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வமான வெளியாகும் என்கிறது தகவல்.