தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருடைய மைத்துனர் எல்.கே.சுதீஷ் அவர்கள் பேட்டி அளித்திருந்தார்
இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்பதை அறிந்து அவருடைய கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு பேரிடையாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதுதான் தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக வந்துள்ள தகவல்