2020 இல் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும் அதிக அளவில் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியான பாடல்கள் ரேடியோக்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஆப்களிலும் மிக பிரபலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 2020 இல் வெளியான பாடல்களில் இணையதளத்தில் சக்கைப்போடு போட்டு சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு வலைதளங்கள் என அனைத்திலும் வைரலான டாப்-5 தமிழ் பாடல்கள் எவை என இங்கு பார்ப்போம்.
பாக்கு வெத்தல – பிரபல ஹிந்தி திரைப்படம் விக்கி டோனர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான தாராள பிரபு திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடல் தொலைக்காட்சி ரேடியோ மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு வலை தளங்களான டிக் டாக் உள்ளிட்ட அனைத்திலும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் “பாக்கு வெத்தல ” என மணமகன் மணப்பெண்ணாகவே மாறியதை அடுத்து 2020ல் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வைரலான பாடல்களில் தாராள பிரபு டைட்டில் ட்ராக் சூப்பர் ஹிட் அடித்தது.
ட்ரெண்டிங் – மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் நிலையில் பாடல்கள் அனைத்தும் அனிருத் இசையில் வெளியாகி மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் இருக்க முதல் முதலாக வெளியான குட்டி ஸ்டோரி பாடல் இதுவரை தமிழில் வெளியாகாத அளவிற்கு வித்தியாசமான விஜய்யின் கார்டூன் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்ட நிலையில் இந்த பாடலில் வரும் வரிகள் அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கின்ற வகையில் அமைந்திருக்க இப்பொழுதும் யூடிபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
உற்சாகமான பாடல் – பேட்ட திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்க சந்தோஷ் நாராயண் தனக்கே உரித்தான வித்தியாசமான இசையில் புகுந்து விளையாடி இருக்க, ஜகமே தந்திரம் திரைப்படத்தில் முதல் பாடலாக வெளியான ரகிட ரகிட வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் உற்சாகப்படுத்தும் காலரைத் தூக்கி விடும் பாடலாக 2020ல் வைரலாகியுள்ளது.
அதிகம் கேட்கப்பட்ட சாங் – சிவகார்த்திகேயன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் கல்ய வயசு பாடலை எழுதி இருக்க அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கியிருக்கும் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வர முதல் பாடலாக வெளியான “செல்லம்மா செல்லம்மா” பாடலையும் சிவகார்த்திகேயனே பாடல் வரிகள் எழுதி இருக்க காதலர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக மட்டுமல்லாமல் குட்டி பசங்களும் செல்லம்மா செல்லம்மா என பாடலை உச்சரித்துக் கொண்டிருக்க டிக் டாக் பேனை மையமாகக்கொண்டு ரொமான்டிக் பாடலாக உருவாகியிருக்கும் இந்த பாடல் 2020இல் அதிகமாக கேட்கப்பட்டு இணையதளங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் உள்ளிட்டவைகளில் அதிகமாக படுத்தப்பட்டு இந்திய அளவில் வைரலானது.
செம வைரல் – வழக்கமாக பிரபல ஹீரோக்களின் சினிமா பாடல்கள் மட்டுமே இணையதளத்தில் வைரலாகி வர 2020ல் எண்டிங்கில் சற்று வித்தியாசமாக எப்போதோ பதிவேற்றம் செய்யப்பட்ட கிருஸ்துவ பாடல் கிருபா கிருபா சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகி அனைவராலும் ரசிக்கப்பட்ட ஆல்பம் பாடலாக இது மாறியது. மேலும் சினிமா பாடல்களே தோத்துப் போகும் வகையில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்து ரசித்து வைரலாக்கி உள்ளனர்.
நன்றி : tamil.filmibeat.com