பாடகி சின்மயி, தனது கணவர் ராகுல் ரவீந்திரனுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், அவர் புடவையில் இருந்ததால் சற்று உடல் பருமனாக இருப்பது போல காணப்படுகிறார். இதனால், அவர் கர்ப்பமாக இருப்பது போன்று சமூக வலைதளங்களில் செய்தி பரப்பி விட்டார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சின்மயி, “நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அப்படியே குழந்தை பிறந்தாலும் சமூக வலைதளத்தில் பகிர மாட்டேன்.
அதோடு குழந்தை வளர்ந்த பிறகு சமூக வலைதளம் பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.