தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.
இவர் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார். சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து ரசிகர்களை கவர்ந்தார்கள்.
சமீபத்தில் மனைவி சில்வியா கர்ப்பமாக இருப்பதாக சாண்டி மாஸ்டர் அறிவித்தார். பின்னர் சில்வியாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சாண்டி மாஸ்டர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.