செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் 50 ஆண்டு திரைப்பயணம்

உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியின் 50 ஆண்டு திரைப்பயணம்

4 minutes read

கடவுளின் தேசம் என்ற பிற மாநிலத்தவர்களால் அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை எழிலோடு இருக்கும் அம்மண்ணும் எதையும் முற்போக்காக அணுகக் கூடிய அம்மக்களும் சினிமாவை சினிமாவாக பார்த்தாலும் வாழ்வில் எல்லோரையும் போலவே அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு தேவைப்படுகிறது. அப்படி அவர்களுக்கு துயரங்களை மறந்து ரசிப்பதற்கும் மகிழ்வதற்கும் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகமே உலகில் உள்ள மனிதர்களுக்கெல்லாம் அருமருந்தாக உள்ளது.

தென் மாநிலங்களாகட்டும், வட மாநிலங்களாகட்டும் மக்கள் தங்கள் ஆதர்ச நாயகர்களை திரையில் கண்டாலே கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். ஆம் தமிழ்நாட்டில் நமக்கு எப்படி கமல், ரஜினி சூப்பர் ஸ்டாரோ அதுபோல கேரளத்தில் சேட்டன்கள் அனைவரும் அன்போடு அழைக்க கூடிய மம்முக்கா என்ற மம்மூட்டியும் மோகன்லாலும் தான் அங்கு சூப்பர் ஸ்டார்கள். இப்படி எல்லோராலும் செல்லமாக மம்முக்கா என்று அழைக்கப்படும் நடிகர் “மம்முட்டி” அவர்கள் மலையாள சினிமாவான மல்லுவுட்டில் தனது 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 

வாருங்கள் நம் மம்முக்கா திரைத்துறையில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்:

மம்முட்டி அவர்கள் 1971இல் கே. எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் “அனுபவங்கள் பாலிச்சிகள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக தோன்றினார்.

இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. பிறகு 1973 இல் வெளிவந்த காலச்சக்கரம் திரைப்படத்தில் இவருக்கு இயக்குனர் பிரேம் நசீர் வாய்ப்பு கொடுத்தார். சிறு சிறு வேடம் ஏற்று நடித்து வந்த மம்முட்டிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் 1980-ஆம் ஆண்டு எம். டி வாசுதேவன் நாயர் எழுதி எம் ஆசாத் இயக்கிய வீல்கணுன்டு ஸ்வப்னங்கள் (Vilkanandu Swapnangal) திரைப்படம் தான் இவருக்கு  கதாநாயகன் என்ற சிறப்பினை பெற்று தந்தது.

அதற்கடுத்த ஆண்டு 1982இல் வெளியான துப்பறியும் த்ரில்லர் கதைக்களம் கொண்ட யவனிகா திரைப்படத்தில் “மம்மூட்டி அவர்கள் காவல்துறை அதிகாரி வேடத்தில் சிறப்பாக நடித்து பலரது பாராட்டினையும் பெற்றார்.

இப்படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக படம் முழுக்க வலம் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து படங்களில் காவல்துறை அதிகாரி மற்றும் துப்பறியும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Rajinikanth

மலையாள சினிமாவில் வணிக ரீதியாக இவருக்கு இரு படங்கள் பெயரை பெற்றுக் கொடுத்தது. பத்மராஜனின் “கூடேவிதே (Koode Vidhe) மற்றும் ஜோசியின் ஆராத்திரி இவ்விரு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை தந்தது என்றே சொல்லலாம்.

பின்பு 1982 முதல்  1986 இந்த ஐந்தாண்டு கால கட்டத்தில் மம்முட்டி அவர்கள் கதாநாயகனாக 150 படத்திற்கு மேல் நடித்து குவித்திருந்தார்.

“மம்முட்டி அவர்கள் மலையாளம், தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1989 இல் கே.மதுவின் இயக்கத்தில் மௌனம் சம்மதம் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தடம் பதித்தார்.

மறைந்த மூத்த இயக்குனர் கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் அழகன் படத்திலும் அதற்கு அடுத்து மணிரத்தினத்தின் தளபதி படத்தில் இவர் ஏற்று நடித்த தேவா கதாப்பாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகர் மம்முட்டியும் கலக்கியிருப்பார். இப்படத்தில் இவர்கள் இருவரின் நட்பு பற்றிய காட்சியும், இளையராஜாவின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது என்றால் அது மிகையாகாது.

அதுவும் காட்டுக் குயில் மனசுக்குள்ளே என்ற பாடல் இன்றளவும் நண்பர்கள் தினத்தன்று ஒருவருக்கொருவர் வாட்சஅப் ,ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்கிறார்கள்.எனில் அது எந்தளவுக்கு ரீச் ஆகியிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

ஒருமுறை மேடை ஒன்றில் நடிகர் மம்முட்டியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் சவாலான கதாபாத்திரம் என்ன என்று கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் “டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தில் நடித்த அம்பேத்கர் கதாபாத்திரம் தான் என்றார்.

இப்படி தனது 50 வருட திரைப்பயணத்தில் 3 முறை தேசிய விருதும் 10 முறை ஃபிலிம்ஃபேர் விருதும் கேரள மாநில அரசு  விருதினை 10 முறையும் ஏசியா நெட் விருதினை 5முறையும் வென்றுள்ளார்.நமது மம்முக்கா அவர்கள்.

வெறுமனே திரையில் மட்டும் நல்லவராக தோன்றாமல் நிஜ வாழ்க்கையிலும் பல நல்ல செயல்களை செய்து வருகிறார். உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால் குழந்தைகள் பிச்சை எடுப்பதைத் தவிர்க்கவும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் சில அறக்கட்டளைகள் மூலம் நல்லெண்ணத் தூதராகவும் செயல்படுகிறார்.

இப்படி நிழல் நாயகராக மட்டும் இல்லாமல் நிஜ நாயகராகவும் இருந்து வரும் நடிகர் மம்முட்டி அவர்கள் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மிக உயரிய விருதான “பத்மஸ்ரீ விருதினை 1998 ஆம் ஆண்டு அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இன்னும் தனது திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே மற்றவர்களைப் போலவே நமது எண்ணமும் கூட வாழ்த்துக்கள் மம்முக்கா.

நன்றி : zeenews.india.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More