இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’.திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த ‘பத்தல பத்தல’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது.
விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலரை சென்னையில் விழா அமைத்து ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.
இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டிரைலரை நடிகர் ராம் சரண் இன்று சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.