விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் பேசும் போது, 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் ரசிகர்கள் 20 ரூபாய் செலவு செய்வார்கள்.
ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இப்போது நன்றி சொல்ல மாட்டேன்.
வேற மாதிரி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் என்றார்.