செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஷான் ரோல்டனின் இசையில் கவனம் ஈர்க்கும் ‘உன் சாமி என் சாமி’

ஷான் ரோல்டனின் இசையில் கவனம் ஈர்க்கும் ‘உன் சாமி என் சாமி’

1 minutes read

நடிகர் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ பராரி ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ உன் சாமி என் சாமி ‘ என தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகி இருக்கும்’ பராரி’ எனும் திரைப்படத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் ,குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன், வி. பிரேம்நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை கலா ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜுமுருகன் வழங்குகிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான ‘உன் சாமி என் சாமி வேடியப்பன்..’ எனத் தொடங்கும்  பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியை உமாதேவி எழுத, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடி இருக்கிறார்.

இந்தப் பாடலில் இடம் பிடித்திருக்கும் பாடல் வரிகளும், கருத்துக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More