செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா துருவா சர்ஜா நடிக்கும் ‘மார்டின்’ பட அப்டேட்

துருவா சர்ஜா நடிக்கும் ‘மார்டின்’ பட அப்டேட்

1 minutes read

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான துருவா சர்ஜா அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘மார்டின்’ திரைப்படத்திலிருந்து ‘மார்டின் ஆந்தம்’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகர் துருவா சர்ஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பாடல் குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் ஏ பி அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மார்டின்’ திரைப்படத்தில் துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேசி ஜெயின், ஜார்ஜியா அன்டிரைணி, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நவாப் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சர்மா மற்றும் ரவி பஸ்ரூர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

தேசப்பற்றை வலியுறுத்தி எக்சன் என்டர்டெய்னராக தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை வாசவி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் கே. மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 11 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகிறது.

இந்த தருணத்தில் படத்தின் நாயகனின் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழுவினர் பாடல் ஒன்றின் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே இந்தப் படத்தின் நாயகனான துருவா சார்ஜா , ‘மார்டின்’ படத்திற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதும், இந்தத் திரைப்படம் கன்னட மற்றும் இந்தி திரையுலகில் அதிக அளவிலான திரைகளில் திரையிடப்படுகிறது என்பதும், தமிழில் ‘வேட்டையன்’ அதிக திரைகளை ஆக்கிரமித்திருப்பதால் குறைவான திரைகளில் இப்படம் வெளியிடப்படுகிறது என்பதும், இருப்பினும் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை கடக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.