0
உங்கள் சுவையை தூண்டும் டெவில்ட் சிக்கன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான டெவில்ட் சிக்கன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
- சிக்கன் – அரைக் கிலோ
- குடை மிளகாய் – 2 (சதுரமாக நறுக்கியது)
- வெங்காயம் – 2
- இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
- தக்காளி – 2
- சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு மேசைக்கரண்டி
- தக்காளி கெச்சப் – ஒரு மேசைக்கரண்டி
- மிளகாய்த் தூள் – ஒரு மேசைக்கரண்டி
- மிளகுத் தூள் – அரை மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – ஒரு மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
உணவு செய்முறை : டெவில்ட் சிக்கன்
- Step 1.முதலில் சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
- Step 2.இப்பொழுது வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். பின்னர் குடை மிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவேண்டும்.
- Step 3.பிறகு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவேண்டும். பிறகு பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிய வைக்கவும்.
- Step 4.பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்னெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- Step 5.வெங்காயம் வதங்கி இஞ்சி, பூண்டு விழுது வாசம் தணிந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
- Step 6.இப்பொழுது தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி கெட்ச்சப் சேர்த்து கிளறவேண்டும்.
- Step 7.பின்பு அதில் சதுரமாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.
நன்றி : அறுசுவை சமையல்