0
உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
- பாசிப்பருப்பு…………1கப்
- தேங்காய்…………….2 மேசைக்கரண்டி
- திராட்சை…….15
- தேங்காய்…………….2 மேசைக்கரண்டி
- ஏலக்காய்……..6
- முந்திரி…………….10
- பால்……………1 டம்ளர்
- வெல்லம்………….11/4 கப்
- கேரட்……….1 மேசைக்கரண்டி
உணவு செய்முறை : பாசிப்பருப்பு பாயாசம்
- Step 1.முதலில் பாசிப்பருப்பை குக்கரில் 2 கப் நீர் விட்டு வேகவைக்கவும். பின்பு வெல்லத்தை துருவி, சுடுநீரில் கரைத்து வடித்து வைக்கவும்.தேங்காய், பாதி முந்திரி, தோல்நீக்கிய ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
- Step 2.மீதி முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்தெடுக்கவும்.பின்னர் அதே வாணலியில் கேரட்டையும் போட்டு வதக்கி எடுக்கவும்.அகலமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி வேகவைத்த பாசிப்பருப்பு போட்டு கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும்.
- Step 3.பின்பு அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.வறுத்த முந்திரி, திராட்சை, கேரட் போடவும்.கடைசியாக காய்ச்சிய பால் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.பின்பு பரிமாறவும்.
நன்றி : அறுசுவை சமையல்