தேவையானவை:
சிக்கன்…………………. ..1/4 கிலோ
மிளகாய்ப் பொடி………..1 தேக்கரண்டி
மல்லிப் பொடி………………1 தேக்கரண்டி
மிளகுப் பொடி…………….1/2 தேக்கரண்டி
சீரகப் பொடி…………………1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ……………….கொஞ்சம்
எலுமிச்சை சாறு………….1 தேக்கரண்டி
தயிர்…………………………….1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட்……1 தேக்கரண்டி
வெங்காயம்………………….100 கிராம
தேங்காய்ப்பால்……………100 .மில்லி
தக்காளி………………………..4
கறிவேப்பிலை…. ஒரு கொத்து
மல்லி தழை……………கொஞ்சம்.
புதினா……………………கொஞ்சம்.
உப்பு தேவையான அளவு..
தேங்காய் எண்ணெய்……….50 மில்லி
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். அதனை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும் தக்காளியை மிக்சியில் நன்கு அரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் மிளகாய்த் தூள், மல்லி தூள், மிளகுபொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி போட்டு சிவக்காமல் வறுத்து அதிலேயே அரைத்த தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வதக்கிய வெங்காயம், வதக்கிய தக்காளி + மிளகாய் தூள், மல்லி தூள் போன்றவற்றைப் போட்டு அதிலேய இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, எலுமிச்சை சாறு, தயிர், ஒரு தேக்கரண்டி, உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். இதனை குளிர் பதனப் பெட்டியில் உள்ள பிரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். 24 மணி நேரம் வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு போட்டு, அது சிவந்ததும், சிக்கனைப் போட்டு வதக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து, அதில் தேங்காய்ப் பாலை விடவும். மசாலா மற்றும் தேங்காய்ப் பால் நீர் வற்றி வரும்போது, அதில் மல்லி, புதினா + கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
நன்றி : கீற்று இணையம்