புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கொத்து புட்டு | செய்முறை

கொத்து புட்டு | செய்முறை

1 minutes read

உங்கள் சுவையை தூண்டும் கொத்து புட்டு சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கொத்து புட்டு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  வெங்காயம் – ஒன்று
  •  மெல்லியதாக நறுக்கிய இஞ்சி – சிறிது
  •  தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு – ஒரு துண்டு (அல்லது) ஒரு கப்
  •  பச்சை மிளகாய் – 2
  •  குழம்பு கிரேவி – அரை கப்
  •  உப்பு – சிறிது
  •  தாளிக்க:
  •  எண்ணெய், கடுகு
  •  மிளகாய் வற்றல் – ஒன்று
  •  கறிவேப்பிலை – ஒரு கொத்து

உணவு செய்முறை : கொத்து புட்டு

  • Step 1.முதலில் வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
  • Step 2.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவேண்டும்.
  • Step 3.உப்பு சிறிது சேர்த்தால் போதும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டைச் சேர்த்துக் கலந்துவிடவேண்டும்.
  • Step 4.பின்ப அத்துடன் குழம்பு கிரேவியை சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். மாலை நேர டீயுடன் சாப்பிட, சுவையான கொத்து புட்டு தயார். கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More