தேவையான பொருட்கள்
கோழிக்கறி – 1/2 கிலோ,
வரமிளகாய் – 10,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி – சிறிது,
பூண்டு – 5 பல்,
சின்ன வெங்காயம் – 10,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை
முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமாக கழுவவும். கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி வைக்கவும். வரமிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு உடன் தக்காளி சேர்த்து வதக்கவும். வரமிளகாய், தக்காளி இரண்டும் தன் தோல் தளிந்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதுவே இந்தக் கறியின் தனிச்சிறப்பு.
மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தீயை மென்மையாக வேக விடவும். பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
நன்றி-தினகரன்