தேவையானவை:
பசலைக் கீரை – 1 கட்டு,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
நெய் – 1 டீஸ்பூன்,
பொடித்த மிளகு – 1/2 டீஸ்பூன்,
வரக்கொத்துமல்லி – 1 டீஸ்பூன்.
செய்முறை:
கீரையை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும். 200 மி.லி. தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம், மல்லியை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த கீரை, உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
சூடு ஆறியவுடன் மத்தில் நன்கு கடையவும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும், வைட்டமின்களும் கீரையில் உள்ளது.
நன்றி-தினகரன்