தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய்-250 கிராம்
சின்ன வெங்காயம்-15
பூண்டு-3,
தக்காளி-1,
கறிவேப்பிலை- 2 கொத்து
புளி தண்ணீர்- 1 எலுமிச்சை அளவு
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி-3 தேக்கரண்டி
சோம்பு,
சீரகம் -1 தலா தேக்கரண்டி
வெந்தயம்-சிறிது
எண்ணெய் -3 தேக்கரண்டி
செய்முறை:
இது தாளிக்கவோ, எண்ணெயில் வதக்கவோ, தேவையில்லை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும், இது கெட்டியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, புளி தண்ணீர், மிளகாய் தூள் மஞ்சள் தூள், சோம்பு, சீராகம், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும், தண்ணீர் 1 கோப்பை எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.(பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் அளவாக தண்ணீர் சேர்த்தால் போதுமானது) தண்ணீர் அதிகம் தேவியில்லை இது சற்று சேர்ந்தார்ப்போல் இருக்க வேண்டும் நீர்க இருக்க கூடாது. நன்கு வெந்து குழம்பு சுண்டி வரும்போது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறலாம்.
நன்றி-தினகரன்