தேவையான பொருள்கள்:
மட்டன் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2 சிறிதாக நறிக்கி கொள்ளவும்
தக்காளி – 1 சிறிதாக நறிக்கி கொள்ளவும்
கடுகு – ½ தே கரண்டி
கறிவேப்பிலை – கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணை – தேவையான அளவு
வெண்ணெய் – கொஞ்சம்
அரைத்து கொள்ள தேவையான பொருள்கள்:
சிறிய வெங்காயம் – 6
பூண்டு – 6/7 பல்
இஞ்சி – சிறியது
கிராம்பு – 2
மிளகு – 5/6
பட்டை – 1
வத்தல் பொடி – 2 தே கரண்டி
(வத்தல் பொடி இல்லை என்றால் மிளகாய் பொடி – 1தே கரண்டி, தனியா பொடி – 1 தே கரண்டி சேர்த்து கொள்ளலாம்)
மஞ்சள் தூள் – 1/2 தே கரண்டி
சிறிய சீரகம் – 1/2 தே கரண்டி
பெரிய சீரகம் – 1/2 தே கரண்டி
மேலே சொன்ன அனைத்து பொருள்களையும் சேர்த்து mixieயில்நன்றாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த மசாலா. கலவையை மட்டனுடன் சிறுது உப்பு கலந்து 45 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். குக்கர்யில் சிறுது எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்தவுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 4 அல்லது 5 விசில் வரும் வரை நன்கு வேக வைக்கவும். பின்பு வேறு ஒரு கடாயில் சிறுது எண்ணை விட்டு கடுகை போட்டு அது வெடித்த பிறகு கருவேப்பில்லை மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த வெங்காயத்தையும் சேர்த்து பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும். அடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி உள்ள தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்கு மசிந்த பிறகு வேக வைத்த மட்டனை சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும். கடைசியாக சிறிது வெண்ணை சேர்த்தால் சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்.