தேவையான பொருட்கள்:
கருவாடு – 100 கிராம்.
சின்ன வெங்காயம் – 50 கிராம்.
பச்சை மிளகாய் – 2.
தக்காளி – இரண்டு.
கத்தரிக்காய் – 2.
தேங்காய் எண்ணெய் – 2
தேக்கரண்டி.
கடுகு, சீரகம் – சிறிதளவு.
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி.
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி.
கறிவேப்பிலை – சிறிது.
பூண்டு – 20 பல்.
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி.
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி.
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி.
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி.
உப்பு – சிறிது.
புளித் தண்ணீர் – 4
தேக்கரண்டிச் சாறு.
தேங்காய்ப் பால் – 1/2 கப்.
செய்முறை:
கருவாட்டுத் துண்டுகளை 15 நிமிடங்கள் சூடான நீரில் சுத்தம் செய்யவும். ஒரு மண் பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்தபின் பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். கருவாட்டுக் குழம்புக்கு எப்போதும் மண்பானை சமையல்தான் சுவையாக இருக்கும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். கத்தரிக்காய் துண்டுகளைச் சேர்த்து மிளகாய்த் தூள்,
மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக புளிச்சாறு சேர்க்கவும். புளியை கவனமாகச் சேர்ப்பது முக்கியம். புதுப் புளி, பழைய புளி இரண்டிலும் ருசி சற்று மாறுபடும். இவர்கள் கேரளகுடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள் இறுதியாக கருவாட்டுத் துண்டுகளைப் போட்டுக் கலக்கி குறைவான அனலில் 10 நிமிடங்கள் வேகவைத்து பின் தேங்காய்ப் பால் சேர்த்து லேசாக ஒரு கொதி வந்ததும் இறக்கவும். முதல் நாளை விட மறுநாள் இட்லிக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.