செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சட்னி!

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சட்னி!

1 minutes read

தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் – 1 கப்
பூண்டு – 6
புளி – தேவையான அளவு
வரமிளகாய் – 4
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய், தேவையான உப்பு ஆகியவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சட்னி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த சட்னி கலவையை கொட்டி பச்சை வாசனை போகும் வரை கிளறி இறக்க வேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More