0
தேவையான பொருட்கள்:
கீமா – 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்)
வெண்ணெய் – 1 கப்
தயிர் – 500 கிராம்
இஞ்சி பேஸ்ட் – 3 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 3
தக்காளி – 2
கிராம்பு – 5-7
பட்டை – 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் – 2
பச்சை ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 6-7
பிரியாணி இலை – 2
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
- தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
- அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
- பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
- பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.
- பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.
- அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!
நன்றி | மாலை மலர்