955ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ நடித்து வெளியான The Rose Tattoo என்ற திரைப்படத்தில் மர்லின் மன்றோ அணிந்த ஒரு காதணி ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. இந்த காதணி மட்டும் $185,000க்கு ஏலம் போனது.
1955ஆம் ஆண்டு Burt Lancaster என்ற இயக்குனர் இயக்கிய The Rose Tattoo மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஹாலிவுட்டின் கனவுக்கன்னி மர்லின் மன்றோ வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் அணிந்து வந்த வெள்ளியிலான காதணி, அந்த காலக்கட்டத்தில் மிகவும் பிரபல்யமானது. அந்த காதணி ஏலத்திற்கு வந்தது.
Julien’s Auctions என்ற அமெரிக்க நிறுவனம் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்பட்ட பழம்பெரும் பொருட்களை ஏலம் விட்டது. இந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட தொகையில் 20% கமிஷன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மர்லின் மன்றோ அணிந்த காதணியை ஒரு அதிகாரி வாங்கியதாகவும், கூறிய ஏல நிறுவனம், அவருடைய பெயரை வெளியிட மறுத்துவிட்டது.
இதே போன்று ஹாலிவுட் நடிகர் Humphrey Bogart அவர்கள் பயன்படுத்திய லைட்டர் $19,000 க்கு விற்பனையானது.