பொதுவான ஹெல்த் செக்-அப்பை விரைவில் செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
ஹார்மோன் ரீதியாக, இனப்பெருக்க மற்றும் மெட்டாபாலிக் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும்.
இரண்டையும் கண்காணிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்து கொள்வதால், பெரிய நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.
செர்விக்ஸ் கேன்சர் ஒரு காலத்தில் இந்திய பெண்களிடையே ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. மார்பகப் புற்றுநோயும் அச்சுறுத்தல்தான். பாலுறவில் ஈடுபடும் பெண்கள், தங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் ஆண்டுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (இனப்பெருக்க உறுப்பு திரவங்களின்சோதனை) சோதனையை செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.
வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருகிறது, அதேபோல பெண்களிடையே ஆஸ்டியோபோரோசிஸ் நோயும் அதிகரித்து வருகிறது.
கூடிய விரைவில், கால்சியம் மற்றும் ஃபோலிக் அமில துணைப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்குவது நல்லது.
நன்றி பெமினா