ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது, எதற்கும் தயாராக இருப்பது நல்லது.
உங்கள் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதைப் பின்பற்றுங்கள். இயல்பாக இருந்து உங்கள் வழக்கமான பணிகளை செய்து வாருங்கள்.
கர்ப்பமாக இருப்பது கொஞ்சம் சிரமமான நிலைமைதான். உங்கள் உடலில் உள்ள அனைத்தும், ஒரு குழந்தையைக் கையாள்வதற்காக தயாராகி கொண்டிருக்கும்.
இது உடலின் அதிகபட்ச மெட்டாபாலிக் நிலையாகும். இதனால் அனீமியா, ஹைப்பர்டென்ஷன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படக் கூடும்.
ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவள். ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே இயல்பான பிரசவத்திற்கு வழி வகுக்காது. இ
தைப் பற்றி, கடுமையான ஒற்றை மனநிலையில் இருப்பது நல்லதல்ல.
மருத்துவர்களாகிய நாங்கள் எப்போதுமே இயல்பான பிரசவத்திற்கே முன்னுரிமை அளிப்போம், ஏனெனில் அதுதான் இயற்கையின் வழி.
நன்றி பெமினா